Advertisment

எண்ணெய் தோசையால் ஏற்பட்ட தகராறு; வைரலாகும் சிசிடிவி காட்சி

Controversy over oil dosa; CCTV footage goes viral

Advertisment

மயிலாடுதுறையில் ஹோட்டல் ஒன்றில் தோசை சாப்பிட வந்த இளைஞர்கள் கடை ஊழியர்களிடம் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் அசைவ உணவகம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் தோசை சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் எண்ணெய் உற்றாமல் தோசை கொண்டு வரும்படி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பரிமாறப்பட்ட தோசையில் எண்ணெய் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்தநிலையில் கடையின் உரிமையாளர் கௌதமன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணை அடிப்படையில் ராஜராஜன், திவாகர் உள்ளிட்ட இருவர் மீது குத்தாலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

dosa police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe