கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் வசித்து வந்த தந்தைகோவிந்தராஜனை, தவறுதலாக மகன் மோகன் குமார் (29) தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜன் உயிரிழந்தார்.

Advertisment

kovai

தாய், தந்தை இருவருமே மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாத்திரை சாப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் தாயை தாக்கிய தந்தை கோவிந்தராஜனை தடுக்க முற்பட்டபோது, தன்னையும் தாக்கிய தந்தையை தடுக்கஅவசரத்தில் அருகிலிருந்த சுத்தியலால் காலில் அடித்துபோது, தவறுதலாக சுத்தியல் தலையிலும் பட்டதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

தந்தையை உயிரிழந்தது அறியாமல், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, உயிரிழப்பு குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினருக்கு தாமாகவே சம்பவத்தை கூறி மோகன்குமார் சரணடைந்தார்.