Advertisment

'தொப்புள் கொடியை வெட்டிய சர்ச்சை'-இர்ஃபான் விளக்கம்

 'Controversy of cutting the umbilical cord'-Irfan explains

Advertisment

பிரபல யூடியூபர் இர்ஃபான் அண்மையில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று சட்டவிரோதமாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவும் இர்ஃபான் யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் அண்மையில் இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது தொடர்பான வீடியோ ஒன்றை அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக இளங்கோவன் என்பவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'இந்த விவரம் குறித்து விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூட்யூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது' என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து யூடியூபர் இர்ஃபான் விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார். 'எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை; மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன்' என தெரிவித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராமமூர்த்தியிடம் கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை யூடியூபர் இர்ஃபான் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNGovernment Medical irfan Youtube
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe