Advertisment

ஹிஜாப் தடைக்கு எதிரான போராட்டத்தில் சர்ச்சைப் பேச்சு... மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

Controversial speech in against hijab ban ... Police file case against three people!

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஹிஜாப் தடைக்கு எதிராக, மதுரை மாவட்டம், கோரிப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 17- ஆம் தேதி அன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் ரஹ்மத்துலா, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இது தொடர்பாக, ரஹ்மத்துலா உள்ளிட்ட மூன்று பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைத் தேடி வருகின்றனர்.

Hijab judges karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe