/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai434343.jpg)
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிஜாப் தடைக்கு எதிராக, மதுரை மாவட்டம், கோரிப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 17- ஆம் தேதி அன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் ரஹ்மத்துலா, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ரஹ்மத்துலா உள்ளிட்ட மூன்று பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைத் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)