
மதுரை மாநகராட்சியில் உள்ள ராஜாஜி சிறுவர் பூங்காவில் காதலர்கள் அத்துமீறி நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் வைத்துள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அழகர் கோவில், திருப்பரங்குன்றம், கே.கே நகர், சுந்தரம் பூங்கா, ராஜாஜி சிறுவர் பூங்கா என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காதலர்கள் அத்துமீறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோடைவிடுமுறை நேரத்தில் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் பூங்காவிற்கு வரும் நேரங்களில் காதலர்கள் என்ற போர்வையில் சில்மிசங்களில் ஈடுபடும் சிலர் எதிரே உள்ளவர்கள் முகம் சுழிக்கும் படி நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்தது. இதேபோல்காந்தி மியூசியத்தில் காதலர்கள் தொல்லை அதிகரித்ததால் உள்ளே அமர்ந்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ராஜாஜி சிறுவர் பூங்காவில் 'நாய் காதல் செய்யாதீர்கள். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)