/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2321.jpg)
துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே முரண்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் துணைவேந்தர் நியமனம் குறித்து மீண்டும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்வதற்காக தேடுதல் குழுவை பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநரே நியமித்திருக்கிறார் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேடுதல் குழுவில் ஆளுநர் தரப்பு பிரதிநிதி, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட் குழு சார்பாக 2 பிரதிநிதிகள், நான்காவதாக பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் ஒரு பிரதிநிதி என நான்கு பேர் அடங்கியுள்ளனர். இக்குழுவை உரிய அரசாணையாக வெளியிடுமாறு ஆளுநர் தமிழக அரசுக்கு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ஆளுநர் அமைத்த தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் தவிர்த்து மற்றவர்கள் மட்டும்இடம்பெற்ற குழுவை அரசாணையாக உயர்கல்வித்துறை வெளியிட்டது. அதுபோன்ற நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் கட்டாயம் தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என ஆளுநர் இந்த அறிக்கை வாயிலாக தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.
Follow Us