மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்த ஊதியத் தொகையை உடனே வழங்கிடவும் மின்சாரத் துறையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் இன்று 8 நாள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்.

Advertisment

contract workers protest

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தும் அவை நிரப்பப்படாமல் உள்ளது.ஆனால் தமிழக மின்சார வாரியம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை பணி அமர்த்தி அவசர காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்காக பணி செய்து வருகின்றனர்.

Advertisment

ஆனால் அவர்களுக்கு தகுந்த ஊதியம் கொடுப்பதில்லை என்று ஒப்பந்த பணியாளர்கள் புகார் கூறி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கு இது வரை ஊதியம் வழங்காததை கண்டித்தும், மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்த ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், தமிழக அரசு நியமித்த கேங்மேன் பதவியை உடனடியாக தடை செய்ய கோரியும் மதுரை தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 7 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

Advertisment

இன்று 8 வது நாள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.