Skip to main content

அரசுப் பேருந்துக்கு ஒப்பந்த ஓட்டுநர்கள்; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

 

 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 500 பேருந்து ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அரசு முடிவு செய்து, அதற்கான ஒப்புதலையும் வழங்கியது. இதற்கு தொழிற்சங்கங்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது 100 ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமித்திருப்பதாகத் தெரிவித்து அதற்கு கண்டனம் தெரிவித்து டி.எம்.எஸ். வளாகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘தொழிலாளர் துறை ஆணையர்  உத்தரவை மீறி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.   

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !