வருடா வருடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த வருட கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரத்திலுள்ள மதுபான கடைகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கும் 1-ஆம் தேதி கொடியேற்றம் முதல் மகா தீபம் நடைபெறும் 10-ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.