continuous struggle was held demanding the release of Cauvery water

சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் அலுவலகம் எதிரே, தமிழகத்தின் டெல்டா பகுதியில் பாசனத்திற்குத்தண்ணீர் இல்லாமல் பயிர்கள் மடிந்து கருகி வருகிறது. இதனால் விவசாயிகளும் மடிந்து வருகிறார்கள். தமிழகத்திற்கான காவிரி தண்ணீரை ஒன்றிய அரசு பெற்றுத்தரக் கோரியும் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசைக் கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த போராட்டத்திற்குத்தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயச்சங்க மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்கள். இதில் காவிரி டெல்டா பாசன தலைவர் இளங்கீரன் கலந்துகொண்டு போராட்டத்தைத்துவக்கி வைத்துப் பேசினார்.

Advertisment

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ராமச்சந்திரன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தமிழ்வாணன், விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ஸ்டாலின் மணி,விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கற்பனைச் செல்வம், கான்சாகிப் பாசன வாய்க்கால் சங்க செயலாளர் கண்ணன்,துணைச் செயலாளர் ஹாஜா மொய்தீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, ‘காவிரியில் கர்நாடகம் சட்ட ரீதியாக வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத்திறந்து விட உச்சநீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து உத்தரவிட வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில், விவசாயி பாசன தண்ணீர் இல்லாமல் செத்து மடிவதை விளக்கும் வகையில், விவசாயி ஒருவருக்கு மாலை அணிவித்து போராட்டத்தின் முன்பு அமர வைத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.