தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அம்மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (1.9.22) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.