
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், புழல், வில்லிவாக்கம் உள்ளிட்டபகுதிகளிலும் மழையானது பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் ராட்சத மரம் திடீரென சாலை ஓரத்தில் சாய்ந்ததில் கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவை சிக்கி சேதம் அடைந்துள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒயிட் சாலையில் இன்று பெய்த கனமழையின் காரணமாக மிகப்பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த வழியாக வந்த கார் மற்றும் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் காருக்குள் பயணித்தவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)