/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_333.jpg)
சிதம்பரத்தில் 34 சென்டிமீட்டர் மழை பதிவு சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடுப்பளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்துவருகிறது. வியாழக்கிழமை இரவு முதல் அதி தீவிர கனமழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் 34 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_23.jpg)
இந்த நிலையில் சிதம்பரம் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாதநிலை உள்ளது. பல இடங்களில் சரியான வடிகால் வசதி இல்லாமல் இருப்பதால் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
Follow Us