எதிர்ப்பாராத விதமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நேற்று (30/12/2021) மதியம் முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று (30/12/2021) மாலை அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப இருசக்கர, கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணித்த பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
இந்த நிலையில் சாலைகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேங்கிய மழைநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள சாலை, புளியந்தோப்பு, தி.நகர் மேட்லி சாலையில் உள்ள சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/rain-2_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/rain-3_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/rain-4_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/rain-5_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/rain-6_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/rain-7_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/rain-1_0.jpg)