சென்னை ரெட்டேரி பாலத்திற்கு கீழே ஆண்களின்பிறப்பு உறுப்புகளை அறுத்துகொடூர செயலில் ஈடுபட்டசைக்கோ கொலைகாரன்போலீசாரிடம் சிக்கியுள்ளான். ஓரினச்சேர்க்கைக்கு சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் இவ்வாறு செய்ததாக சைக்கோ கொலைகாரன் பகீர்வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

police

சென்னை கொளத்தூரை சேர்ந்தஅஸ்லம் பாஷா என்பவர் கடந்த மாதம் 25ம் தேதியன்று சென்னை ரெட்டேரி பாலத்திற்கு கீழ் பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்லமிடம்மாதவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குடும்பப் பிரச்சனை காரணமாக தன்னுடைய பிறப்புறுப்பைதானே அறுத்துக்கொண்டதாக வாக்குமூலம் கூறினார். இதனால் தற்கொலை முயற்சி என அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விடவே அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் இது தற்கொலை சம்பவம் அல்ல இது ஒரு கொலை சம்பவம் எனவே இந்தமரணம் சந்தேகமரணம்என வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

police

Advertisment

இந்த விசாரணை ஒருபுறம் சென்று கொண்டிருக்க அதே பாலத்தின் கீழ்பகுதியில் கடந்த 2ம் தேதி அன்று நாராயண பெருமாள் என்பவர் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டுதுடித்துக் கொண்டிருந்தார். அவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த ஒருவன்தனது பிறப்புறுப்பை அறுத்துவிட்டான்என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை அதே இடத்தில் இதேபோல் நடந்த பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட சம்பவத்தில் அஸ்லம் பாஷா இறந்ததும்இதேபோல்தானோஎன சந்தேகித்த போலீசார் இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அந்த சைக்கோ கொலைகாரனைதீவிரமாக தேடி வந்தனர். இதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

police

ரெட்டேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவிகேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்தவனின் வீடியோ பதிவு நாராயண பெருமாளிடம் காண்பிக்கப்பட்டது. தனது பிறப்பு உறுப்பை அறுத்ததுஅவன்தான் என்பதை நாராயண பெருமாள் உறுதி செய்யவே அந்த நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

Advertisment

இதையடுத்து அந்தநபர் வில்லிவாக்கத்தில் மீன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டலம் கூடுதல் ஆணையர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,

police

சென்னை ரெட்டேரிபாலத்தின் பக்கத்தில் அஸ்லம் பாஷா என்பவர் பிறப்புறுப்புஅறுக்கப்பட்டு சீரியசான கண்டிஷனரில் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார். இந்த மாதம் இரண்டாம் தேதி மீண்டும் ஒருத்தர் நாராயண பெருமாள் என்பவர் அதேபோல் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு ஹாஸ்ப்பிட்டலில்இருந்தாரு அவரும் முதலில் விசாரிக்கும் பொழுது இது தெரியாமல் பட்டது நானே செய்து கொண்டேன் என்று வெளியே செல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டார்.காவல்துறை விசாரிக்கும் பொழுது ஒருவன்ஓரினச் சேர்க்கையின் போது கட் பண்ணிவிட்டான்என்று சொன்னாரு. அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆய்வு செய்ததில் ஒரே நபர்தான் இந்த இரண்டு வழக்குகளும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது என தெரிவித்தார்.

police

இதைத்தொடர்ந்து அந்த சைக்கோ கொலைகாரனைநேற்று இரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த முனியசாமி என்பதும், அவனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில்குடிபோதையில் இருந்த அஸ்லம் பாஷா மற்றும் நாராயண பெருமாள் ஆகிய இருவருடனும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி ஈடுபட்டதாகவும், சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் அவர்களின் பிறப்புறுப்புகளை அறுத்துவிட்டதாகவும் வாக்குமூலம்கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

police

முதல் நபரின் பிறப்புறுப்பை பிளேடாலும்,இரண்டாவது சம்பவத்தின்போது நாராயணப் பெருமாளின் பிறப்புறுப்பை உடைந்த கண்ணாடி துண்டினால்அறுத்ததாகவும் முனியசாமி ஒப்புக்கொண்டுள்ளான்.டாஸ்மாக்கில் மது அருந்துவோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் தனக்கு லிப்ட்கொடுப்பவர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பதைவாடிக்கையாக வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அவனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.