Continuing water supply ... 'Mettur order' approaching 100 feet

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மேட்டூர் அணைக்குநீர்வரத்துநேற்று முன்தினம்1.50 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று 1.30 லட்சம் கன அடியாக இருந்தது. தற்போது மேட்டூர் அணைக்குவரும் நீரின் அளவு 80 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தொடர் நீர்வரத்து காரணமாக ஒரே நாளில் 9 அடி நீர்மட்டம் உயர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு 58.67 டி.எம்.சி ஆக உள்ள நிலையில், பாசனத்துக்காக 10,000 அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.10 அடியாக உயர்ந்துள்ளது விரைவில் 100 அடியைநெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment