Advertisment

தொடர் மழை... காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 Continuing rain ... Holidays for schools in Karaikal!

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகை, நாகூர், திருப்பூண்டி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருக்குவளை உள்ளிட்ட பகுதியில் மிதமான மழை பொழிந்து வருகிறது. தென்னங்குடி, திருவாரூர், ஆமூர், ஓடாச்சேரி, தென்னகுடி, பழையவலம், வைப்பூர், விளமல் உள்ளிட்ட பகுதிகளிலும், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளிலும், அரியலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பொழிந்து வருகிறது.

தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

karaikkal Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe