ADVERTISEMENT

தொடர்ந்து எரியும் பெருங்குடி குப்பை கிடங்கு! போர்க்கால நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

12:42 PM Apr 29, 2022 | tarivazhagan

ADVERTISEMENT


சென்னை, பெருங்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த புதன்கிழமை தீ பிடித்து எரிந்து வருகிறது. இங்கு லட்சக்கணக்கான டன் குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

ADVERTISEMENT


இதில், 12 தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 300 பேர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 3 நாட்களுக்குப் பிறகு தீ கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பல அடி ஆழத்துக்குச் சென்றுள்ள தீ கங்குகளால் புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. தீ அணைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.


இந்நிலையில், சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு தீப்பற்றி எரிவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பலர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் இதை அரசு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாண வலியுறுத்தியும் பெருங்குடி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு மையம் சார்பில் பெருங்குடி குப்பை கிடங்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT