Advertisment

ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்ட இடத்திலே அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டும் மற்றும் அனைத்து உடல் பரிசோதனை செய்யப்பட்டும் காணப்படுகிறது. உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ள ஆசிரியர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.