சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. மறுபுறம் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர், பவானி உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் பெண்ணை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் ஏற்காடு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக சேலம் மாநகர் நான்கு ரோடு வழியாக செல்லும் ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாமிநாதபுரம், தோப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.