Continued heavy rain; Today is also a holiday for schools in Kumari

Advertisment

நேற்று தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பொழிந்து வருகிறது. பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.