Continued heavy rain ... Holidays for schools in 17 districts!

Advertisment

வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், 11ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, புதுவை ஆகிய பகுதிகளிலும் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், நேற்று (08.11.2021) பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகை, விருதுநகர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, நெல்லை, புதுக்கோட்டை, தென்காசிஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.