Skip to main content

மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்...இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

Published on 30/06/2019 | Edited on 01/07/2019

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் என்பது தொடர் சம்பவமாகிவிட்டது. மத்திய மாநில அரசுகள் தாக்குதல் சம்பவம் நடக்கும் போது இனி நடக்காது என்று சொல்வதையே வழக்கமாகவே உள்ளது. கடலுக்கு போகும் மீனவர்கள் சேதாரமின்றி திரும்பி வர வேண்டும் என்று பெண்கள் கரையில் காத்திருப்பார்கள்.

 

 

 Continued fight on fishermen Atrocity of the Sri Lankan Navy

 

இந்த நிலையில் தான் 29.06.2019 ஆம் தேதி காலை சுமார் 7 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி இறங்குத் தளத்திலிருந்து ஜெதாப்பட்டிணம் கலைவாணன் (50),  என்பவருக்குச் சொந்தமான  IND TN 08 MM 399 என்ற பதிவு எண் கொண்ட விசை படகில் மீனவர்கள்  கார்த்திக் (25), குட்டியாண்டி (25), ராசு (65), மனோகர் (எ)வழிவிட்டான் , ஆனந்த் (48) ஆகியோர் ஆழ கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சர்வதேச எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு விசைப்படகு சேதமடைந்தது. இதில் விசைப்படகின் வலது முன்பக்கம் சேதமானது.

 

 

 

 Continued fight on fishermen Atrocity of the Sri Lankan Navy

 

 

அதனைத் தொடர்ந்து மீனவர்களின் வலைகளும் இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் படகில் இருந்த 5 மீனவர்களும் அதே  படகில் தப்பி வந்துள்ளனர்.  இதில் குட்டியாண்டி என்வரைத் தவிர மீதமுள்ள 4 மீனவர்களும் காயத்துடன் மணமேல் குடி அரசு மருத்துவனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மணமேல்குடியில் உள்ள   தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர். மத்திய அரசு தமிழக மீனவர்கள் அடிபடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.