Continued electrical negligence casualties

வாணியம்பாடியில்வாட்டர் ஹீட்டரில்கைவைத்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு என்னுமிடத்தில் புருஷோத்தமன் பவித்ரா என்பவர்களின் ஒன்றரை வயது குழந்தைஅனன்யா. தாய் பவித்ரா சமையலறையில் எவர்சில்வர் பாத்திரத்தில் வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடு செய்துள்ளார். அப்போதுவாட்டர் ஹீட்டரிலிருந்து எவர்சில்வர் குடத்தில் மின்சாரம் பாய்வதை அவர் அறிந்திருக்கவில்லை. அவர்சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அனன்யா எவர்சில்வர் குடத்தை தொட்டுள்ளார்.

Advertisment

அப்பொழுது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒன்றரை வயது குழந்தையான, அனன்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் சாதனங்களை முறையாகபயன்படுத்தாததால்ஏற்படும் விபத்துகள் தொடர்கதையாகிவிட்டது. அண்மையில் சென்னையில் அலமாரியில்சார்ஜ்போடப்பட்டிருந்த மொபைலை எடுக்கச் சென்ற மூன்று வயது குழந்தை மேல் டிவி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படி ஒரு விபத்து சம்பவம் வாணியம்பாடியில் நிகழ்ந்துள்ளது.