Continued action by the husband; Arrested wife who decided in anger

Advertisment

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தினமும் மது அருந்திவிட்டு கணவன் தகராறு செய்ததால், மனைவி கணவனின் காலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்திற்கு உட்பட்டது எருமாடு கிராமம். இந்த கிராமத்தின் பள்ளியரா எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமரன் - சாரதா தம்பதியினர். இவர்களுக்கு சுஜாதா, சுனிதா, பிரியா, சிவானந்தம் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் குமரன் தினந்தோறும் மது குடித்துவிட்டு மனைவி சாரதாவிடம் தகராற்றில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு மனைவியிடம் குமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தசாரதா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் காலை வெட்டியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை பார்த்த பொழுது கணவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். கால் பகுதியில் நரம்பு துண்டிக்கப்பட்டதால் உடலில் இருந்த ரத்தம் அனைத்தும் வெளியேறி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத்தகவல் கொடுத்த நிலையில். சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா காவல்துறையினர் உயிரிழந்த குமரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, உயிரிழப்புக்கு காரணமான மனைவி சாரதாவை கைது செய்தனர்.