
சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு மட்டுமல்லாது அவருக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களிலும் சோதனையானது கடந்த சில நாட்களாகத்தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 5 ஆம் தேதிகாலை 6:30 மணி முதல் தற்பொழுது வரை 5 நாட்களாகஇந்த சோதனை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அவருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. வருமான வரித்துறையினர் இதுவரை பறிமுதல் செய்தவிவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், இன்று ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகனுக்கு சொந்தமான இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை வைத்துஅதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைக்காக டெல்லியில் இருந்து வருமான வரித்துறை ஆணையர் சுனில் குப்தா சென்னைக்கு வருகை தந்துள்ளார். இதுகுறித்து அவரும் விசாரணையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)