கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் காட்டு நாயக்கன் சமூகத்தைச் சார்ந்த மகேஸ்வரி என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என போலியாக சான்றிதழ் வாங்கிதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், அவருடைய வெற்றியை ரத்துசெய்ய வலியுறுத்தியும் அவருக்கு போலியாக சாதி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை சுமார் 300-க்கும் மேற்பட்ட வேப்பூர் காலனி கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest

போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் வேப்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் விரக்தி அடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே சென்று வட்டாட்சியரிடம் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்க சென்றனர்.

Advertisment

அவர்களை அலுவலகத்தின் உள்ளே செல்ல விடாமல் வேப்பூர் காவல் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் தடுத்ததால் பொது மக்கள் கொந்தளிப்பு அடைந்தனர்.

பின்னர் அங்கு வந்த வேப்பூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் வட்டாட்சியர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி பொதுமக்கள் கேரிக்கை மனுவை தாசில்தார் கமலா விடம் ஒப்படைத்துவிட்டு கலைந்து சென்றனர்.

இதில் விசிக அர்சுணன், சக்திவேல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விடுதலை வளவன், தமிழ்செல்வன், பாக்யராஜ், சங்கர், சிவகுமர், சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.