Advertisment

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? -கடிதம் எழுதிய நீதிபதி...

kl;

Advertisment

நீட் தேர்வு பயத்தில் 3 பேர் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில், நடிகர் சூர்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்து இருக்கிறார்கள். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. சாதாரண குடும்ப பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்புவோம்.

நீட்தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு வாழ்த்து கூறுவதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல் அவலம் எதுவுமில்லை. கரோனா காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதிதான் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவதுதான் வேதனை. நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. உயிருக்கு பயந்து காணொளிகாட்சி மூலம் வழக்குகளை நடத்துகின்ற நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Surya
இதையும் படியுங்கள்
Subscribe