Skip to main content

மாசடையும் அடையாறு..! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ..!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

 

environment

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் ஆரம்பித்து திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், சைதாபேட்டை, கோட்டூர்புரம், பட்டிணம்பாக்கத்தில் கடலில் கலக்கும் அடையாறு சென்னையை ஒட்டியுள்ள முக்கியபாசன நீர் ஆதாரமாகவும் விளங்கிவந்தது தற்போது அது மாசடைந்ததால் கூவம்ஆற்றுக்கு இணையாக சாக்கடையும் கழிவுகளையுமே பாயிகிறது ..! ஆதனூரில் ஆரம்பிக்கும் போது சுத்தமான தண்ணீர் ஆற்றில் ஓடுகிறது இது பெரும்பாலும் மழைகாலத்தில் கரைபிரண்டு ஓடும் ..! திருநீர்மலை, திருமுடிவாக்கம் சிப்கார்ட் கம்பெனி கழிவுகள் அப்படியே கலப்பதும் மேலும் சுற்றுவட்டார பகுதி கழிவுநீர் வண்டி கழிவுகள் கொட்டுவதும், நாகிள்கேணி தோல் கம்பேனி கழிவுகள் என கடலை அடையும்வரை வெறும் கழிவுகளே கலப்பத்தால் ஆறுமாசடைந்து அடையாறு என்பது கழிவுநீர் ஆறாக ஓடுகிறது ..! 

 

environment

 

சமீபத்தில் முடிந்த பிள்ளையார் சத்திக்கு சென்னையில் வைக்கப்பட்ட 2500 சிலைகளையும் கடலில் தான் முறையாக கரைக்க வேண்டும் என்பதை அறிந்தும் சில விஷமிகள் தடையை மீறி பிள்ளையார் சிலைகளை அடையாற்றில் கரைத்தனர் இதனால் ஆற்றுப்படுகை மாசடைவது ஒருபுறமிருக்க சிறுவர்கள் அந்த கழிவுநீரின் தீமை அறியாமல் விளையாடிவருவதையும் பத்துநாட்கள் கழிந்தும் அந்தசிலைகள் கரையாமல் நிர்பதையும் நம் கேமராவில் பதிவு செய்து சைதாபேட்டையில் உள்ள மாசுகட்டுபாடு வாரிய அதிகாரியை அனுகியபோது இதுக்கெல்லாம் காவல்காக்க முடியுமா .. என்ற அலட்சியமான கேள்வியை நம்மையே பார்த்தே கேட்டார் மாசுகட்டுபாடு வாரிய சேர்மேன் சாம்புகலோலிகர் ... அவர்துறையின் வேலை என்னவென்றே தெரியாத துறை சேர்மேன் ..?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
court order to remove idols from bus stand

பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி  ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று (13.03.2024) விசாரணைககு வந்தது.  அப்போது, “வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.