Advertisment

கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

nn

சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்காக இயக்கப்படும் கண்டெய்னர் லாரிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Advertisment

சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பணிகளுக்காக பயன்படுத்தப்படும் கண்டெய்னர்லாரிகளின் உரிமையாளர்கள் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆன்லைன் முறையில் லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும்; 40 சதவீத காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும்; வடசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் லாரிகளை பார்க்கிங் செய்வதற்கான டெர்மினல் அமைத்து கொடுக்க வேண்டும்; நிலுவையில் உள்ள ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் மற்றும் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

Chennai strike
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe