Advertisment

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் அக்கா, தங்கை உயிரிழப்பு 

container lorry sisters incident police investigation

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவிகளான அக்கா, தங்கை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, இவரது இரண்டு பெண் குழந்தைகளான ஜெய ஸ்ரீ, வர்ஷா ஸ்ரீ ஆகியோர் ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (15/09/2022) காலை தண்டபாணி, தனது இரண்டு மகள்களையும் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்ல, ஆம்பூர் ஓ.ஏ.ஆர். திரையரங்கம் அருகே உள்ள சிக்னலில் நிற்பதற்காக சென்றுள்ளார்.

Advertisment

அப்போது, அவர்கள் மீது கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாடின்றி வந்து, வேகமாக மோதியது. இதில் ஜெய ஸ்ரீ, வர்ஷா ஸ்ரீ ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த தண்டபாணியை மீட்ட பொதுமக்கள், அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கண்டெய்னரின் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

ambur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe