Advertisment

கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி; கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய தாய், மகள்

Container lorry lost control accident near Ambur

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஓசூர் நோக்கிச்சென்ற கண்டெய்னர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு வேலியில் மோதியுள்ளது, இதில் சாலை ஓரம் இருந்த தடுப்பு வேலிகள் சுக்குநூறாக நொருக்கிய கண்டெய்னர் சர்வீஸ் சாலையில் நின்றுள்ளது, இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக அச்சாலை வழியாக சென்ற தாய் மற்றும் மகள் கண் இமைக்கும் நேரத்தில் விபத்தில் இருந்து உயிர்தப்பினர்,

இதனைத்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து லாரியுடன் தப்பிச்சென்ற நிலையில், இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்க்கொண்டு விபத்து ஏற்படுத்திவிட்டு லாரியுடன் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

மேலும் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி தடுப்பு வேலியில் மோதி தாய் மற்றும் மகள் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

accident ambur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe