Advertisment

குட்கா கடத்தல் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் பகீர் தகவல்!

Drug trafficking ... contact police officers?

திருச்சியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில்,வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு மாவட்டம் வாரியாக கொண்டு சேர்க்கப்படும் இந்தப் புகையிலை, குட்கா உள்ளிட்டவை கடைகளில் விற்பனைக்கு வரும்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.

Advertisment

அந்தவகையில், தற்போது திருச்சியில் வாகன சோதனையின்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி சஞ்சீவி நகர்ப் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மைசூரிலிருந்து முட்டைகோஸ் ஏற்றிவந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர்.

Advertisment

அப்போது வாகனத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முட்டைகோஸ் மூட்டைகளுக்கு இடையே கிலோ கணக்கில் குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இருந்ததைக் காவல்துறையினர் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், ஒரு டன் அளவிலான இந்தப் போதை வஸ்துக்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனரிடம் வாகனங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர்நடத்திய விசாரணையில், திருச்சி நகருக்குள் போதை வஸ்துக்கள் எங்கெல்லாம் கொண்டு சேர்க்கப்படுகிறது என்ற விவரங்களைக் கேட்டறிந்துவருகின்றனர்.

Drug trafficking ... contact police officers?

இந்நிலையில், நேற்று முன்தினம் (27.09.2021) திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் மைசூரிலிருந்து முட்டைகோஸ் ஏற்றிவந்த லோடு வேனில் 64 மூட்டைகளில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சரக்கு வேனை ஓட்டிவந்த கர்நாடக மாநிலம் பகுதியைச் சேர்ந்த சோமசேகர், மனோஜ் குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் இந்தப் போதை பொருட்களை திருச்சியிலுள்ள வியாபாரிகளுக்கு கொடுக்க வந்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், அவரது சகோதரர் முத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒவ்வொரு மாதமும் இதேபோல் குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களை சரக்கு வாகனம் மூலம் திருச்சி மாவட்டத்திற்கு கொண்டு வந்து சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை சம்பாதித்தது தெரியவந்துள்ளது. இந்த விற்பனைக்கு ஆதரவாக இருந்த திருச்சி காவல்துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் கமிஷன் கொடுத்துள்ளனர். குறிப்பாக மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கும் கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் தொடர் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

police smuggled Drugs
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe