Advertisment

கரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட நுகர்வோர்கள்! (படங்கள்)

Advertisment

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு அமலில் இருந்தது. அதனைத் தொடர்ந்து நோய்ப் பரவலின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போதுவரை சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், மக்கள் அதனைப் பெரிதும் பொருட்படுத்தாமல் விதிமுறைகளை மீறிவருகின்றனர்.

அதேபோல் கரோனா மூன்றாம் அலை வர அதிக வாய்ப்புள்ளது என உலக சுகாதார நிறுவனம்எச்சரிக்கை விடுத்திருக்கும்நிலையில், மக்கள் எதையும் கண்டுகொள்ளாமல் பொது இடங்களில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றமால் கூட்டமாக நடமாடுகின்றனர். அந்த வகையில் இன்று (23.07.2021) ஆடி வெள்ளி என்பதால், பூக்கள் மற்றும் பழங்கள் வாங்க மக்கள் குவிந்ததால் பாரிமுனை பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

people gathered Market Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe