Advertisment

மாநகராட்சி அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

consumer Court warrant order for municipal officers

Advertisment

நெல்லை மாநகரின் மகிழ்ச்சி நகரிலுள்ள 51 வது வார்டின் ரத்னகுமார் என்பவர் தனது வீட்டிற்கு குடி நீர் இணைப்பு கேட்டு தனது பகுதியின் கார்ப்பரேசனின் அப்போதைய மண்டல துணை ஆணையர் காளிமுத்துவிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் துணை ஆணையரும், அப்போதைய மாநகர கமிசனருமான சிவகிருஷ்ணமூர்த்தியும் ஒன்றரை ஆண்டுகளாக விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யாமல் கிடப்பில் வைத்துவிட்டனர்.

ஆனால் ரத்னகுமார் தனக்கான நீதி கேட்டு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் சென்றிருக்கிறார் வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் ரத்னகுமாருக்கு இழப்பீடும,குடிநீர் இணைப்பும் தர வேண்டும் என்று கடந்த ஏப்ரலின் போதே உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியும், துணை ஆணையரும் கோர்ட் உத்தரவை நிறைவேற்றாமல் போகவே, ரத்னகுமார் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய, வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இரு வருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து விட்டது.

இரண்டு அதிகாரிகளும் இடம் மாற்றம் ஆனநிலையில், தற்போதைய மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இன்று ரத்னகுமாருக்கு எட்டாயிரம் இழப்பீட்டிற்கான காசோலையை வழங்கி வழக்கை கோர்ட்டில் சமரசமாக முடித்தனர். இந்த வழக்கில் ரத்னகுமார் சார்பில் வழக்கறிஞர் ஆரோக்யராஜ் ஆஜரானார்.

nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe