Advertisment

சாப்பாட்டில் கிடந்த மூன்றெழுத்து பொருள்... ஒரு லட்சம் அபாரம் விதித்த நீதிமன்றம்!

சென்னையில் உள்ள பிரபல தனியார் ஒட்டல் ஒன்றில் வழக்கறிஞர் ஒருவர் உணவு உட்கொண்டுள்ளார். அவர் சாப்பிட்ட உணவில் முடி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உணவாக மேலாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு வேறு உணவு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

court issue

இந்நிலையில், சுகாதாரமற்ற அந்த உணவால் தனக்கு வாந்தி மயக்கம் உண்டானதாகவும் கடுமையான வயிற்றுவலியும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நீதிமன்றத்தில் அந்த வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். அவருடைய மனுவில், சுகாதாரமற்ற உணவை வழங்கிய அந்த உணவகம் தனக்கு இழப்பீடாக ரூ.60 லட்சமும், மன உளைச்சல் ஏற்படுத்தியற்காக ரூ.30 லட்சமும் வழங்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். அதோடு தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இதையடுத்து இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தனியார் உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது

hotel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe