Advertisment

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்!

Consultative meeting held at the District Collector's Office

Advertisment

திருச்சி மாவட்டத்தில் தற்போது 65 வார்டுகள் உள்ள நிலையில் கூடுதலாக 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 25 ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் 25 ஊராட்சி தலைவர்களும் நகராட்சியாகத்தரம் உயர்த்தப்பட உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களும் அதன் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாநகராட்சியாகத்தரம் உயர்த்தப்படும் போது எப்படிப்பட்ட வசதிகள் அந்தப் பகுதிகளுக்குக் கிடைக்கும் என்பது குறித்தும் மேலும் இன்னும் வளர்ச்சி திட்டங்கள் செய்வதற்கான தேவைகள் குறித்தும் ஊராட்சி தலைவர்களிடமிருந்து ஆலோசனைகளாகப்பெறப்பட்டது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

District Collector Meeting trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe