Advertisment

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் - முதல்வர் ஆலோசனை!

Consultation meeting on women's programs chaired by Chief Minister Stalin

Advertisment

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள்பொன்முடி, கீதா ஜீவன், சக்கரபாணி, சாமிநாதன், பெரியகருப்பன், காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் துறை சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்று வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர்கள் தங்கள் துறைகளின் கீழ் வரும் திட்டங்களின் நிலை குறித்து முதல்வருடன் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் முடிவில் என்ன விஷயங்கள் குறித்துஆலோசிக்கப்பட்டது என்றவிவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe