Advertisment

12ஆம் வகுப்பு தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம்...  தமிழக பாஜக உள்ளிட்ட 2 கட்சிகள் எதிர்ப்பு!

exam

அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில்,தமிழ்நாட்டில்பிளஸ் 2பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா, ரத்து செய்யப்படுமா என்பது குறித்துஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டநிலையில், இதுகுறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில்,தமிழ்நாட்டில்பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது பற்றி 13 சட்டமன்றக் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று (05.06.2021) காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

Advertisment

இக்கூட்டத்தில் திமுக சார்பில் அரசு கொறடாவான கோவி. செழியன் பங்கேற்றிருக்கிறார். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய காங்கிரசின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை கலந்துகொண்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Appose

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 13 கட்சிகளில் இரண்டு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளுமே 12ஆம்வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பாரதிய ஜனதாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்வை நடத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். மற்ற 11 கட்சிகளும் தேர்வை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கூறப்படுவதாவது, ''இந்த 12ஆம் வகுப்பு தேர்வை நடத்தவில்லை என்றால் எதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். உடனே நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சொல்வார்கள். இது நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு வழிவகுத்துவிடும். மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் என எந்த படிப்பாகினும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளது.

+2 exams all party meeting TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe