
அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்சார்பில், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. திருச்சி, தில்லை நகர் பகுதியில் உள்ள, வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல்மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
வருகின்ற 24 ஆம் தேதி நடைபெற உள்ள மறைந்த தமிழக முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது. திமுக அரசை கண்டித்து வருகின்ற 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில்நான்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்துவது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட, திருச்சி பாராளுமன்றத்தொகுதி, பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக சார்ந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில்,கட்சி அமைப்பு செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக மகளிரணி இணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)