Skip to main content

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு (படங்கள்)

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர்  எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  அர. சக்கரபாணி  ஆகியோர் தலைமையில் சென்னை, சேப்பாக்கம், வேளாண்மைத் துறை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை 10.00 மணியளவில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நெல் கொள்முதல் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த மூத்தோர் தடகள சங்க வீரர்கள்!

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

 Senior Athletic Association players who met the Minister of Sports!

 

பிலிப்பைன்ஸில் நடந்த 2023-ஆம் ஆண்டுக்கான 22-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில்இந்தியா சார்பில் பங்கேற்ற, சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தைச் சேர்ந்த, 15 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தது. 

 

இச்சந்திப்பில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பில் சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் செண்பகமூர்த்தி, அதுல்யா மிஸ்ரா இஆப, மேகநாத ரெட்டி இஆப ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

சம்பா மகசூல் இழப்பீடு 560 கோடி ரூபாய் - தமிழக அரசு அறிவிப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

nn


சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பைத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாகத் தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏழு லட்சம் ஏக்கர் சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது' எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2022-23 ஆம் ஆண்டில் சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 மெட்ரிக் டன் உற்பத்தி அடையப்பட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாகப் பெய்த காரணத்தால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 181 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கி உள்ளது.  இந்த நிலையில் தற்போது 560 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 6 லட்சம் தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என்று வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.