Consultation led by AIADMK ex-minister in Trichy!

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, கழக, சார்பு அணி செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisment

இந்த கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள திருச்சி பாராளுமன்றத்தொகுதியிலும், பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதியிலும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஆலோசனைப்படி அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து அனைவரும் சிறப்பாகத்தேர்தல் பணியாற்றுவது. வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபடுவது எனவும், அதேபோன்று பாராளுமன்றத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர் எல். ஜெயக்குமார், மாணவரணி மாவட்டச் செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.