Skip to main content

அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

குமராட்சி அருகேயுள்ள கூடுவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் அரசு தொழில்நுட்பகல்லுாரியில், முதல் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, 3-ம் கட்ட  துணை கலந்தாய்வு வரும் 12ம் தேதி நடக்கிறது என்று கல்லூரியின் முதல்வர் தங்கமணி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

Consultation on the 3rd stage of the Government College of Technology


சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அருகேயுள்ள கூடுவெளி கிராமத்தில் அரசினர் தொழில்நுட்ப கல்லுாரி கட்டிடம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. கல்லூரி தற்காலிகமாக சிதம்பரத்தில் உள்ள முத்தையா தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்த, கல்வி ஆண்டிற்கான  சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட 6 பிரிவுகளில், 300 மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

அரசு தொழில் நுட்ப கல்வி துறை சார்பில், மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இரண்டு முறை நடத்தப்பட்டு 226 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.  மீதம் உள்ள 74 இடங்களுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு  வரும் 12-ம் தேதி முத்தையா பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டய படிப்புக்கு சேர விருப்பம் உள்ள மாணவர்கள் சான்றிதழ்களுடன், வரும் 12-ம் தேதி, கல்லுாரி முதல்வரை நேரில் சந்தித்து சேர்க்கை ஆணையை பெற்றுக்கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.