Construction worker who misbehaved

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (37), கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக சந்திரசேகர், ஜெயந்தி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பலகையால் தலையில் தாக்கியுள்ளார்.

Advertisment

இதில் பலத்த காயமடைந்த ஜெயந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்துசோமரசம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சந்திரசேகரின் குழந்தைகள் நேரடி சாட்சிகளாக நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீதிபதி ஸ்ரீவத்சன், சந்திரசேகருக்கு ஜெயந்தியை கொடுமைப்படுத்திய வழக்கில் இரண்டு ஆண்டுகள்சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisment

மேலும், ஜெயந்தியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தாத பட்சத்தில் மேலும்ஆறுமாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தார். இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து சந்திரசேகரை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.