/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/covai_3.jpg)
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தங்களது 17 வயது மகள் மாயமானதாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரைப் பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பழனி காந்திபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. சிறுமியின் வீட்டுக்கு அருகில் விக்னேஷ் கட்டிட வேலை செய்து வந்தபோது சிறுமிக்கும் விக்னேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து திருமண ஆசை வார்த்தை கூறிய விக்னேஷ் சிறுமியைப் பழனிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இதனிடையே பழனி காவல்துறையினர், இளம் ஜோடி ஒன்று பாதுகாப்புக் கேட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாக கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பழனிக்குச் சென்ற போத்தனூர் போலீஸார் விக்னேஷை கைது செய்ததோடு சிறுமியை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். விக்னேஷ் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)