Construction worker jailed for 7 years

ஈரோட்டில் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கட்டிடத் தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

Advertisment

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சித்தராசு வீட்டுக்கு அருகே உள்ள 11 வயது சிறுமியை சைக்கிள் ஓட்டகற்றுத்தருவதாகச்சொல்லி அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சித்தராசு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததைசிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க, பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.இதையடுத்து, சித்தராசு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்றம் பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 7ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டது.