/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-11_21.jpg)
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அண்ணா புது காலனி பகுதியைச்சேர்ந்தவர் மணிவேல்(29). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதனால் மன வேதனையில் இருந்த மணிவேல் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீர்னு எழுந்து வீட்டிலிருந்த பெட்ரோல் கேனை எடுத்து தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த அவரது மனைவி எழுந்து வந்து பார்த்தபோது கணவர் தீயில் கருகி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிவேலை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 90 சதவீத தீக்காயத்துடன் மணிவேல் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)