சென்னை கலைவாணர் அரங்க கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு அரசியலமைப்பு குறித்த உரையரங்கம் நடைபெற்றது.

Advertisment

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் இந்திய ஒன்றியத்தின் மேனாள் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபில் எம்.பி, இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகேஷ் உருவ படத்தைத்திறந்து வைத்தார். தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் (சட்ட மாணவர்) பெயரில் நிறுவப்பட்டுள்ள ராகேஷ் சட்ட அறக்கட்டளையை கபில் சிபில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர் கலந்துகொண்டார்.