இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்ட தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதாஎன விவாதிக்க வேண்டிய நேரம் இது. தற்போதைய காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது” எனப் பேசினார்.